90ஸ் கிட்ஸ் பாவம்…78 வயது முதியவரை காதலித்து கரம் பிடித்த 18 வயது இளம்பெண்

Marriage Viral Photos
By Thahir Oct 04, 2022 01:15 PM GMT
Report

78 வயது முதியவர் ஒருவரை 18 வயது இளம்பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உனக்கு 78 எனக்கு 18 

திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் முக்கியமான நிகழ்களில் ஒன்று. அதிலும் குறிப்பாக தற்போது திருமணம் குறித்து 90 கிட்ஸ் புலம்பல் இருக்கே சொல்லி மாளாது.

இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரஷாத் மங்காகோப் 78 வயதான இவர் ஒரு விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஹலிமா அப்துல்லாவை காதலித்து திருமணம் செய்துள்ளார் என்பது தான் இன்றைய நாளின் வைரல் செய்தியாக உள்ளது.

பிலிப்பைன் நாட்டில் உள்ள ககாயன் மாகாணத்தில் இரவு விருந்து ஒன்றில் ரஷாத் மங்காகோப் மற்றும் ஹலிமா அப்துல்லா இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர்.

காதலாக மாறிய நட்பு 

அப்போது இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்துள்ளது. இந்த நிலையில் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

90ஸ் கிட்ஸ் பாவம்…78 வயது முதியவரை காதலித்து கரம் பிடித்த 18 வயது இளம்பெண் | 18 Year Old Girl Fell In Love With 78 Year Old Man

இவர்களின் திருமணம் உறவினர்கள் சூழ வெகு கோலகலமாக நடந்துள்ளது. 78 வயது முதியவரை 18 வயது இளம் பெண் காதலித்து திருமணம் செய்து கொண்ட  திருமண புகைப்பட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.