கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியா? சிறு வணிகர்கள் மீது தாக்குதல் - கொந்தளித்த பாலகிருஷ்ணன்!

BJP Government Of India
By Sumathi Nov 15, 2024 04:37 AM GMT
Report

சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ளது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "மத்தியில் பா.ஜ.க அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்கியும்,

கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டியா? சிறு வணிகர்கள் மீது தாக்குதல் - கொந்தளித்த பாலகிருஷ்ணன்! | 18 Percent Gst On Shop Rent Of Small Traders

சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிகர்களுக்கு விரோதமான நடவடிக்கைகளையும் அமல்படுத்தி வருகிறது. தற்போது, வாடகை கடைகளை நடத்தி வரும் சிறு வணிகர்கள் கடை வாடகை தொகையில் 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரியை இனி ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என கடந்த செப்டம்பர் 23-ந்தேதி கூடிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உயரும் பெண்களின் திருமண வயது; அதுவும் இந்தியாவில்.. முக்கிய ஆலோசனை!

உயரும் பெண்களின் திருமண வயது; அதுவும் இந்தியாவில்.. முக்கிய ஆலோசனை!

பாலகிருஷ்ணன் கண்டனம்

மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு மிக மோசடியானது மட்டுமின்றி, வாடகை இடத்தில் வாணிபம் செய்யும் ஏழை, நடுத்தர வணிகர்கள் மீது தொடுத்துள்ள மோசமான தாக்குதலாகும். கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைத்துள்ள மோடி அரசு,

k. balakrishnan

சிறு வணிகர்கள் நடத்தும் கடை வாடகைக்கும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதித்துள்ளது சிறு வணிகர்கள் மீது தொடுக்கப்பட்ட கொடூர தாக்குதலாகும். மத்திய பா.ஜ.க அரசின் இந்த முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக மத்திய அரசு இந்த முடிவை திரும்ப பெற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.