அங்கும் இங்கும் சிதறி கிடந்த உடல்கள் - குடும்ப நிகழ்ச்சியில் அரங்கேறிய கொடூரம்!
தென் ஆப்பிரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா
உலகில் மிக அதிக அளவில் மனித கொலைச் சம்பவங்கள் நிகழும் நாடுகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்றாகும். துப்பாக்கிச் சூட்டில் பல பேர் கொல்லப்படும் சம்பவங்கள் அந்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.
சில நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்தும் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென் ஆப்பிரிக்காவின் லுசிகிசிகி நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கிழக்கு கேப் மாகாணத்தின் லுசிகிசிகி நகரில் நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரண்டு வீடுகளைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இரண்டு வீடுகளில் 12 பெண்களும், ஒரு ஆணும் கொல்லப்பட்டதாகவும், மற்றொரு வீட்டில் மூன்று பெண்களும், ஒரு ஆணும் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு
இந்த சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறைனர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பியோடிய நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் குடும்ப நிகழ்ச்சியின்போது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அருகாமையில் உள்ள குவாசுலு-நட்டால் மாகாணத்தில் வீடு புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.