17 வயது சிறுமி கர்ப்பம்..தற்கொலை செய்துகொண்ட இளைஞர் - நடந்தது என்ன!
17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
சிறுமி கர்ப்பம்
திருவாரூர், மூவாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்(32). நெல் வியாபாரம் செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார். இதனால் நெருங்கி பழகியதில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் அறிந்த பெற்றோர் அவரிடம் விசாரித்துள்ளனர். அதில் சிறுமி அழுதபடி நடந்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை கடுமையாக கண்டித்துள்ளனர். எனவே மணமுடைந்த சிறுமி பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
இளைஞர் தற்கொலை
உடனே அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னை அபிராமி விசாரணை நடத்தினர்.
அதன்பின், சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த சுரேஷ் தலைமறைவாகி தூத்துக்குடி தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கு அவர் நீண்ட நேரம் அறையை விட்டு வெளியே வராததால் ஊழியர்கள் சன்னல் வழியே பார்த்துள்ளனர்.
அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்து போலீஸாருக்கு புகாரளித்தனர். அதன்பின் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.