காதலனுடன் சென்ற சிறுமி - திருமணம் செய்து வைப்பதாக எரித்துக் கொன்ற கொடூர தந்தை
மகளை காதலனுடன் திருமணம் செய்து வைப்பதாக அழைத்து தந்தை கொலை செய்துள்ளார்.
காதல்
மகாராஷ்டிரா, பிர்பிம்பல்காவ் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சூர்யகலா சந்தோஷ்(17). இந்த சிறுமி தன் உறவுக்கார இளைஞர் ஒருவருடன் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. உடனே அவரின் தந்தை சந்தோஷ் சரோடே,

இருவருக்கும் தானே திருமணம் செய்து வைப்பதாக கூறி சிறுமியை வீட்டுக்கு வரவைத்தார். தொடர்ந்து, திருமண மண்டபம் புக் செய்து, குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு திருமண ஏற்பாடுகள் நடந்துள்ளது.
எரித்துக் கொலை
இந்நிலையில், சூர்யகலா திருமண மண்டபத்தில் இருந்த போது, அவரின் தந்தை சந்தோஷ் மற்றும் உறவினர் நாம்தேவ் ஆகியோர் இணைந்து அவரை இழுத்து சென்றுள்ளனர். வீட்டின் அருகில் உள்ள மரத்தில் அவரின் கழுத்தில் கயிற்றை கட்டி தொங்கவிட்டு உடலை இறக்கி சுடுகாட்டுக்கு கொண்டு சென்று எரித்துவிட்டனர்.
இதற்கு அவரது குடும்பத்தினரும் எதிர்ப்புகள் எதுவும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதனையடுத்து, புகாரின் பேரில் போலீஸார் சிறுமி தந்தை மற்றும் உறவினரை கைது செய்துள்ளனர்.