பெரிய கருங்கல்லை தந்தை தலையில் போட்டு கொலை செய்த மகன் - நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்
கோடங்கிபாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு மது பழக்கம் உள்ளது. இதனால், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சண்டையிடுவதை வழக்கமாக வைத்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் எப்போதும்போலவே மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மகன், மகள் மற்றும் தாய் ஆகியோரிடம் தேவையில்லாமல் சண்டையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், மகனுக்கும், தந்தைக்கும் வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த மகன் அஸ்வத், ஒரு பெரிய கல்லை எடுத்து செல்வராஜ் தலையில் போட்டார்.
அப்போது செல்வராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்து போனார். இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் அஸ்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.