17 வயது சிறுமியை 18 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் - பகீர்!
சாமியார் 17 வயது சிறுமியை தொடர் பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சாமியார் மடம்
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களில் மஹந்த் சர்ஜுதாஸ் என்பவர் ஆசிரமங்களை வைத்து நடத்தி வருகிறார். இங்கு சிறுவர்களும், சிறுமிகளும் தங்கி பயின்று வருகின்றனர்.

அதன் வரிசையில், ஆசிட் தாக்குதலுக்கு ஆளான தாயார், அவரது 15 வயது மகளை இங்கு சேர்த்துள்ளார். முதல் 6 மாதங்களில் எந்தவித பிரச்சணையும் இல்லாத நிலையில் தொடர்ந்து மடாதிபதி சிறுமியை தனியே அழைத்து பேசி வந்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
மேலும், சிறுமியின் உடல் பாகங்களை தொட்டு பேசியுள்ளார். நாளடைவில் இதனை உணர்ந்த சிறுமி நண்பரிடம் கூறியுள்ளார். ஆனால் சாமியாரின் பிடியிலிருந்து தப்ப முயன்றும் முடியாமல் போனதால் தனது தாயிடமும், உறவினரிடமும் இதுகுறித்து கூறி அழுதுள்ளார்.
அதனால் அதிர்ச்சியடைந்த தாய் போலீஸில் புகாரளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து சாமியார் கைது செய்யப்பட்டார். இதனால் ஏதே ஒரு பொருளை உண்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக மருத்துவமனையில் அவரை அனுமதித்த போலீஸார் சிகிச்சைக்கு பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்.