17 வயது மாணவி மீது ஆசிட் வீச்சு - தலைநகரை உலுக்கிய பயங்கரம்!

Attempted Murder Delhi Crime
By Sumathi Dec 14, 2022 10:37 AM GMT
Report

பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த 17 வயது மாணவி மீது ஆசிட் வீசி தாக்குதல் நடந்துள்ளது.

ஆசிட் வீச்சு

டெல்லியின் துவரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சிறுமி முகத்தில் ஆசிட் வீசியுள்ளனர்.

17 வயது மாணவி மீது ஆசிட் வீச்சு - தலைநகரை உலுக்கிய பயங்கரம்! | 17 Year Old Girl Attacked With Acid Delhi

இதில், கண்கள் மற்றும் முகம் வெந்து வலியால் அலறித் துடிதுடித்த சிறுமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

பகீர் சம்பவம்

அவருடைய உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக முதல் கட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில்

இரண்டு பேர் சிறுமி மீது ஆசிட் வீசியது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிட் வீசிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர், மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.