சிறுமிகள் தான் டார்கெட்.. எச்.ஐ.வி பாதித்த நபர் செய்த கொடூரம்- பகீர் பின்னணி!
எச்.ஐ.வி பாதித்த நபர் சிறுமிகளைக் குறிவைத்துக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கொடூர நிகழ்வு அரங்கேறியுள்ளது.
குஜராத்
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள ஷாஷிபாக் பகுதியில் 17 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.இவர் கடந்த 2024 மார்ச் மாதம், வெளியூரில் உள்ள தனது உறவினர் திருமண விழாவிற்குப் பெற்றோருடன் வந்தபோது மாயமாகியுள்ளார்.
இது குறித்துப் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கடந்த பல மாதமாக அதிகாரிகள் தேடி வந்தனர்.இந்த நிலையில், மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிஜோரி என்ற பகுதியில் 17 வயது சிறுமியிருந்து மீட்கப்பட்டார்.
அப்போது அவரிடம் இருந்த நபரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகினர். அதில் குற்றம்சாட்டப்பட்ட நபர் எச்.ஐ.வி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. சிறுமிக்குச் சரிவர உணவு கொடுக்காமல் துன்புறுத்தி வந்துள்ளார்.
சிறுமிகள்
மேலும் நாக்பூர், ஹைதராபாத், பிளசிப்பூர், சூரத், அவுரங்காபாத் உட்படப் பல மாநிலங்களுக்கு அழைத்துச் சென்றும் வன்கொடுமை செய்துள்ளார்.இறுதியாக அவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிஜோரியில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது மீட்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் 17 வயது சிறுமி போல் 6க்கும் மேற்பட்ட சிறுமிகளைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்தது.இதனையடுத்து எச்.ஐ.வி பாதித்த நபரால் பாலியல் வன்கொடுமை செய்த சிறுமிகளைக் கண்டறிந்து அவருக்கு நோய்த்தொற்று பரவியுள்ளதா? என்பதை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.