கவுன்சிலரின் 23 வயது மகள்; இதற்கு தான் கொன்றேன் - 17 வயது சிறுவன் வெறிச்செயல்

Crime Dharmapuri
By Sumathi Jun 09, 2023 05:15 AM GMT
Report

23 வயது இளம்பெண்ணை கழுத்தை நெரித்து 17 வயது சிறுவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரம்

தர்மபுரியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன். 8வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் ஹர்ஷா (23). மருந்து பிரிவில் பட்டபடிப்பு முடித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 6 மாதமாக வேலை செய்து வந்தார்.

கவுன்சிலரின் 23 வயது மகள்; இதற்கு தான் கொன்றேன் - 17 வயது சிறுவன் வெறிச்செயல் | 17 Year Old Boy Killed 23 Year Old Girl Dharmapuri

இந்நிலையில், நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதியில் கழுத்தில் காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீஸார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், ஹர்ஷாவின் செல்போன் எண்ணிற்கு வந்த அழைப்பை பரிசோதனை செய்ததில்

சிறுவன் கொலை

அவர் கடைசியாக காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனிடம் போன் பேசியுள்ளது தெரிந்தது. அதனைத் தொடர்ந்து சிறுவனிடன் விசாரணை நடத்தியதில், “நானும் ஹர்ஷாவின் தம்பியும் நெருங்கிய நண்பர்கள். அவரின் வீட்டிற்குச் சென்ற பொழுது ஹர்ஷாவுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமானது. இந்த நிலையில் ஹர்ஷா ஓசூருக்கு வேலைக்குச் சென்ற இடத்தில் வேறு ஒருவரைக் காதலிப்பதாக என்னிடம் கூறினார். ஆனால் இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததால் ஹர்ஷாவிடம் சண்டைபோட்டேன்.

இந்நிலையில் சம்பவத்தன்று ஹர்ஷாவிடம் பேச வேண்டும் என்று நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் நரசிங்கபுரம் கோம்பை வனப்பகுதிக்கு அழைத்தேன். அப்போது அங்கு வந்த ஹர்ஷாவிடம் என்னைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று மிரட்டினேன்.

ஆனால் அதற்கு அவர் ஒத்துக்கொள்ளாததால் ஹர்ஷாவின் துப்பட்டாவை வைத்து அவரின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.” என தெரிவித்துள்ளார். அதனையடுத்து சிறுவனின் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.