சிறுவன் வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. அறுவை சிகிச்சை மூலம் அகற்றம் - அதிர்ச்சி தகவல்!
17 வயது சிறுவனின் வயிற்றிலிருந்து கூடுதலாக இருந்த 2 கால்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17 வயது சிறுவன்
உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கு வயிற்றில் கூடுதலாக 2 கால்கள் வளர்ந்திருந்தன. இதனால் பள்ளிக்குச் செல்ல முடியாமல், சிறுவன் படிப்பையே நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பல்வேறு சிரமங்களைச் சந்தித்த சிறுவன் கூடுதலாக வளர்ந்த 2 கால்களை அகற்ற முடிவு முடிவு செய்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அப்போது சிறுவனின் வயிற்றைத் சுற்றி துணியால் மூடியிருந்தது .
இதை முதலில் பார்க்கும்போது மடியில் இன்னொரு குழந்தை இருப்பது போல் தோன்றியது.பிறகு வயிற்றிலிருந்து துணியைக் கழற்றி பார்த்த போது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் ஆய்வு நடத்தினர். பின்னர் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
2 கால்கள்
கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி 2மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும்,சிறுவனின் வயிற்றில் உள்ள 2 கால்களையும், பெரிய நீர்க்கட்டிகளையும் வெற்றிகரமாகப்அகற்றப்பட்டுள்ளது.அதன்பிறகு சிறுவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,’’ இரட்டையர்கள் கருத்தரிக்கும் போது, ஒருவரின் உடல் வளர்ச்சி அடையாமல், அதன் உறுப்புகள் இன்னொருவரின் உடலுடன் இணைவது காரணமாகவே இவ்வாறு ஏற்படுவதாகவும் இது கோடியில் ஒருவருக்கு மட்டுமே நிகழும் அரிய சம்பவம் என்று தெரிவித்துள்ளனர்.