அறிமுக போட்டி 7 விக்கெட் - 0 ரன் !! 17 வயதில் மாபெரும் சாதனை செய்த வீராங்கனை

Cricket Indonesia Cricket Record
By Karthick Apr 26, 2024 09:14 PM GMT
Report

கிரிக்கெட் உலகில் தற்போது மகளிர் கிரிக்கெட் தொடரும் கவனம் பெற துவங்கியுள்ளது.

17 வயதில்

பெரும் சாதனை படைப்பவர்கள் உலகத்தின் கவனத்தை இணையத்தின் வழியாக பெறுகிறார்கள். அப்படி தான் தற்போது இந்தோனேசியா வீராங்கனை பெரும் பாராட்டுகளை குவித்து வருகின்றார்.

17-year-female-cricketer-creates-record-7-wicket

இந்தோனேசியா அணியை சேர்ந்த Off Spinner ரோமாலியா நேற்று(26-4-24) நடைபெற்ற பெண்கள் டி20ஐ கிரிக்கெட்டில் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். இந்த சாதனையை அறிமுக போட்டியிலேயே அவர் நிகழ்த்தியுள்ளார்.

தொடர் தோல்வி - இவ்வளவு மாற்றமா?? SRH'க்காக தனி பிளான் போடும் ருதுராஜ் - தோனி!!

தொடர் தோல்வி - இவ்வளவு மாற்றமா?? SRH'க்காக தனி பிளான் போடும் ருதுராஜ் - தோனி!!

7 விக்கெட்

மங்கோலியா அணிக்கு எதிரான போட்டியில் அவர் இந்த சாதனையாய் நிகழ்த்தியள்ளார். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தோனேசியா அணி 151/ 5 சேர்த்தது. பிறகு விளையாடிய மங்கோலியா 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ரோஹ்மாலியா தனது முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தினார். ஒட்டுமொத்தமாக அவர் வீசிய 3.2 ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்காமல், ஏழு பேரை டக் அவுட்டாக்கியுள்ளார்.