வீடிருந்தும் ரயிலில் வாழும் 17 வயது சிறுவன் - பயணம் செய்தபடி சம்பாதிக்கும் அதிசயம்!
17 வயது சிறுவன் ஒருவர் தினசரி சுமார் 1000 கி.மீ வரை ரயிலில் பயணம் செய்து வருகிறார்.
ரயில் வாழ்க்கை
ஜெர்மனி நாட்டை சேர்ந்தவர் 17 வயது சிறுவனான லாஸ் ஸ்டோலி. இவர் தனது 15 வயதிலிருந்து ரயிலில் வாழவேண்டும் என்ற தனது ஆசையை கூறி வந்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அவரின் பெற்றோர், ஒரு கட்டத்தில் சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து ஸ்டோலி தனது ரயில் வாழ்க்கையை தொடங்கினார்.
தினமும் சுமார் 1000 கி.மீ வரை முதல் வகுப்பு பெட்டியிலேயே பயணிக்கும் இவர், டிபன், சாப்பாடு, தூக்கம் என ரயிலிலேயே நாளை கழித்து வருகிறார். மேலும் தனக்கு வேண்டுமென்ற இடத்திற்கு தினமும் சென்று வருகிறார்.
வருடாந்திர அட்டை
தினமும் ரயிலில் பயணிப்பது அதிக செலவு என்பதால், ஜெர்மன் ரயில்வே வழங்கும் வருடாந்திர ரயில் அட்டையை பெற்றுள்ளார். இதன் மதிப்பு 8,500 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.8.5 லட்சம்) ஆகும்.
இந்த வருடாந்திர ரயில் அட்டையை வைத்திருப்பவர்கள் ஒரு வருடத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் முதல் வகுப்பில் பயணிக்கலாம்.
மேலும், தனது வலைப்பதிவான Life On The Train-காக தினமும் பயணம் செய்யும் வீடியோக்களை பகிர்ந்து புரோகிராமராக பணியாற்றி ஸ்டோலி சம்பாதித்து வருகிறார். இந்த சிறுவன் ரயிலிலேயே 2 வருடங்களாக வாழ்க்கையை கழித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.