செல்போனில் அந்த ஆப் இன்ஸ்டால் பண்ண கூடாதா? கோபத்தில் சிறுமி எடுத்த விபரீத முடிவு!
செல்போனில் ஆப் இன்ஸ்டால் செய்ய தந்தை எதிர்ப்பு தெரிவித்ததற்கு சிறுமி விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா
தற்போதைய நவீன உலகில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் நேரம் வெகுவாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக இளம் வயதினர் பெரும்பாலான நேரத்தை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சாப், ஸ்நாப் சேட் போன்ற சமூக வலைத்தளங்களிலே செலவழிக்கின்றனர். இந்த நிலையில், சமூக வலைதள செயலியால் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சிறுமிக்கு துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது செல்போனில் ஸ்நாப் சேட் (snapchat) என்ற செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். இதற்கு அந்த பெண்ணின் தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (21.06.2024) இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
விபரீத முடிவு
இதனால் கோபமடைந்த சிறுமி தனது அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு மினிவிசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். மறுநாள் காலை அறை கதவை திறந்து பார்த்த பெற்றோர் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.