செல்போன் பார்க்காத..படி என்று கண்டித்த பெற்றோர் - மனமுடைந்து பெண் எடுத்த விபரீத முடிவு!

Karnataka Bengaluru Death
By Swetha May 08, 2024 05:41 AM GMT
Report

செல்போன் பார்க்காதே என்று பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

செல்போன்  

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகில் உள்ள திப்பகொன்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயண். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு லிகிதா(18) என்ற மகள் இருந்தார். இவர் தினமும் செல்போன் பயன்பாட்டில் மூழ்கியப்படியே இருந்துள்ளார். இதனால், கடுப்பான இவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.

செல்போன் பார்க்காத..படி என்று கண்டித்த பெற்றோர் - மனமுடைந்து பெண் எடுத்த விபரீத முடிவு! | Girl Committed Suicide

இருப்பினும், அவர் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்துள்ளார். தொடர்ந்து லிகித்தாவின் நடவடிக்கையை கவனித்த பெற்றோர்கள் அவரை அழைத்து இது தொடர்பாக கண்டித்துள்ளனர், அதாவது, செல்போனை எடுப்பதை தவிர்க்கும்படியும், புத்தகத்தை எடுத்து படிக்கும்படியும் கூறி உள்ளனர்.

கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய உருக்கமான கடிதம்!

கணவன் ஆணவ படுகொலை; மனைவி தற்கொலை - சிக்கிய உருக்கமான கடிதம்!

விபரீத முடிவு

இதனால் மனமுடைந்த லிகிதா தனது அறைக்குள் சென்று கதவை மூடினார். நெடு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது லிகிதா தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

செல்போன் பார்க்காத..படி என்று கண்டித்த பெற்றோர் - மனமுடைந்து பெண் எடுத்த விபரீத முடிவு! | Girl Committed Suicide

இது குறித்தது அக்கம்பக்கத்தினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். தவலறிந்து வந்த அவர்கள் லிகிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.