16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் வெறிச்செயல்!
16 வயது சிறுமியை சிறுவர்கள் உட்பட 6 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பர்த்டே பார்ட்டி
மும்பையை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அவரது ஆண் நண்பர் சிறுமியை இரவு பிறந்தநாள் விருந்துக்கு பரேல் பகுதியில் உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். வீட்டில் ஆண் நண்பரின், நண்பர்கள் 5 பேரும் இருந்துள்ளனர்.

அங்கு சிறுமியை கட்டாயப்படுத்தி அவரது ஆண் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மற்ற 5 பேரும் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில் சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
சம்பவ இடம் விரைந்த போலீஸார் சிறுமியை மீட்டு 6 பேரையும் பிடித்தனர். அதனையடுத்த விசாரணையில், 6 பேரும் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து வழக்குப்பதுவு செய்து கைது செய்துள்ளனர்.
மேலும், அவர்களில் 3 பேர் சிறுவர்கள் என்பதால் டோங்கிரியில் உள்ள காப்பகத்தில் அடைத்தனர்.