சிறுமிக்கு ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை - 10 கிலோ உப்பைக் கொட்டி உடலை புதைத்த உறவினர்!
சிறுமியை அவரது உறவினர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
பாட்னா, அர்வால் பகுதியை சேர்ந்த சிறுமிக்கும், ஜெகனாபாத்தில் இருந்த அவரின் உறவினருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதில் விருப்பம் இல்லாத்தால் சிறுமி திருமணத்தை நிறுத்தியுள்ளார். இந்நிலையில், அந்த உறவினரின் இளைய சகோதரன் விஜேந்தர் குமார்.

இவர் அந்த சிறுமியுடன் அடிக்கடி போனில் பேசி நெருங்கி பழகி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, விஜேந்தர் சிறுமிக்கு போன் செய்து, அர்வால் பஜாரில் தன்னை சந்திக்க அழைத்துள்ளார். சிறுமியும் அங்கு சென்ற நிலையில் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
கொலை
இதற்கிடையில், சிறுமி காணாமல் போனதையடுத்து, குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அதில், இளைஞருடன் சிறுமியும் போனில் அடிக்கடி பேசுவது தெரியவந்தது.
உடனே அவரை கைது செய்து விசாரித்தனர். அதில், ஜானிபூரில் ஆள் நடமாட்டம் இல்லாத புதர் நிறைந்த இடத்தில் சிறுமியின் உடலைப் புதைத்துள்ளார். உடலை அடக்கம் செய்வதற்கு முன், உடல் விரைவாக அழுக 10 கிலோ உப்பை சிறுமியின் உடல் மீது ஊற்றியதாக தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.