16 வயது சிறுமியை சரமாரியாக குத்தி கொன்ற இளைஞன் - பயந்து வேடிக்கை பார்த்த மக்கள்!

Attempted Murder Delhi
By Vinothini May 29, 2023 10:31 AM GMT
Report

டெல்லியில் ஒரு இளைஞன் 16 வயது சிறுமியை குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடூர கொலை

தலைநகர் டெல்லியில், ரோஹிணி ஷாபாத் டெய்ரி என்ற பகுதியில் 16 வயது சிறுமியை ஒரு இளைஞன் பின்தொடர்ந்துள்ளார்.

16 வயது சிறுமியை சரமாரியாக குத்தி கொன்ற இளைஞன் - பயந்து வேடிக்கை பார்த்த மக்கள்! | 16 Years Old Girl Murdered By A Man

பிறகு தன்னிடம் இருந்த கத்தியால் அந்த பெண்ணை குத்த தொடங்கினார். அந்த சிறுமியை அவர் விடாமல் திரும்ப திரும்ப குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த கத்தி அவரின் தலையில் பாய்ந்ததும் அதனை எடுக்க முடியாமைல் விட்ட அவர், அருகில் இருந்த சிமெண்ட் மூட்டையை எடுத்து ஆத்திரம் தீராமல் தாக்கியுள்ளார்.

இதனை கண்ட மக்கள் அதனை தடுக்காமல் பயத்தில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

விசாரணை

இதனை தொடர்ந்து, சிசிடிவியில் பதிவாகி இருந்ததை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த சிறுமியின் பெயர் நிக்கி என்றும் அந்த இளைஞன் ஷாஹில் என்றும் தெரியவந்தது.

மேலும், அவர்கள் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது, பிறகு ஒரு நாளுக்கு முன்பு இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.

அதன்பின்னர், ஷாஹிலின் நண்பரின் குழந்தைக்கு பிறந்தநாள் விழா நடந்தது. அதில், கலந்துகொள்வதற்காக நிக்கி செல்லும் வழியில் அவரை வழிமறித்து கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.

இதனால் அந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இது குறித்து காவல் துறை கூறுகையில், "கொலை செய்யப்பட்ட நபரின் அடையாளம் உறுதியாகிவிட்டதால் அவரை விரைவில் கைது செய்வோம். போலீஸார் பல்வேறு குழுக்களாக பிரிந்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர்" என்று கூறியுள்ளனர்.