பிரியாணிக்காக 60 முறை குத்திக்கொலை - சடலத்தின் மீது குத்தாட்டம் போட்ட 16 வயது சிறுவன்!
இளைஞர் ஒருவரை கொலை செய்துவிட்டு சடலத்தின் முன்பு 16 வயது சிறுவன் நடனமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூர கொலை
தலைநகர் டெல்லியின் ஜந்தா மஸ்தூர் காலனி பகுதியில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இறந்த அந்த உடலில் சுமார் 60 கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கொல்லப்பட்டவருக்கும், கொலையாளிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய 16 வயது சிறுவன் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் நடந்தபோது சிறுவன் போதையில் இருந்துள்ளான். கொல்லப்பட்டவரிடம் பிரியாணி சாப்பிட வேண்டும் என 350 ரூபாயை சிறுவன் கேட்டிருக்கிறான்.
சிறுவன் கைது
அவர் பணம் தர மறுத்ததும், திருட முயன்றபோது இருவருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கிறது. இதில், சிறுவன் அந்த இளைஞரின் கழுத்தை நெரித்தும், அவர் மயங்கியுள்ளார்.
அப்போது அந்த இளைஞரின் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக கத்தியால் குத்தியிருக்கிறான் சிறுவன். இதில் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் இறந்திருக்கிறார். இதனையடுத்து, அவரின் உடலை அருகிலிருந்த சந்துக்கு இழுத்துச் சென்ற சிறுவன், சடலத்தின் முன்பு நடனமாடியிருக்கிறான்.
இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கின்றன. அதனடிப்படையில் அந்தச் சிறுவனைப் பிடித்து விசாரித்துவருகிறோம்" என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.