காதலால் நெருக்கம்; 16 வயது சிறுமி கர்ப்பம் - கல்லூரி மாணவனுக்கு வலைவீச்சு!
16 வயது நர்சிங் மாணவியை கர்ப்பமாக்கிய மாணவனை போலீஸார் தேடி வருகின்றனர்.
மாணவி கர்ப்பம்
பண்ருட்டி, அன்னங்காரன் குப்பத்தை சேர்ந்தவர் வைத்தியநாதன். இவரது மகன் வாஞ்சிநாதன் (20). பி.எஸ்சி 3 ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் பேர்பெரியான்குப்பம் ராஜன் நகரைச் சேர்ந்த 16 வயது நர்சிங் படிக்கும் மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
தீவிர விசாரணை
அதனால் இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். தொடர்ந்து, மாணவி தற்போது கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் வாஞ்சிநாதனை தேடி வருகின்றனர். மேலும், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.