மாமியாரை கர்ப்பமாக்கிய மருமகன் - ஹனிமூன் அதிர்ச்சியில் மனைவி எடுத்த முடிவு!

London Pregnancy
By Sumathi Apr 09, 2023 08:37 AM GMT
Report

மனைவிக்கு துணையாக வந்த மாமியாரை மருமகன் கர்ப்பமாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

தேன் நிலவு

பிரிட்டன், தென்மேற்கு லண்டன் பகுதியைச் சேர்ந்தவர் லாரன் வால்(34). இவர் தனது 19 வயதில் பால் வைட் என்ற இளைஞருடன் டேட்டிங் செய்து, காதல் உறவில் ஈடுபட்டார். இதன்மூலம் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

மாமியாரை கர்ப்பமாக்கிய மருமகன் - ஹனிமூன் அதிர்ச்சியில் மனைவி எடுத்த முடிவு! | Mother In Law Gets Pregnant With Son In Law

அதனைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்த நிலையில், அந்தப் பெண்ணின் தாயார் ஜூலி மகளுக்கு பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து வைத்தார். அதன்பின் தேன் நிலவு செல்வதற்காக, லாரனின் தாய் தனியாக இருப்பார் என்பதால் அவரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

மாமியார் கர்ப்பம்

அப்போது மூவரும் பார்ட்டி செய்துள்ளனர். அப்போது போதையில் மருமகன் மாமியார் ஜூலியிடம் தவறாக நடந்துக் கொண்டுள்ளார். அதனையடுத்து, ஜூலி கர்ப்பமாக இருந்த நிலையில், மகளுக்கு செய்தி தெரியவந்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மாமியாரை கர்ப்பமாக்கிய மருமகன் - ஹனிமூன் அதிர்ச்சியில் மனைவி எடுத்த முடிவு! | Mother In Law Gets Pregnant With Son In Law

அதனால் மகள் விவாகரத்து பெற்றுள்ளார். இந்நிலையில், தாய் குழந்தை பெற்றெடுத்துள்ளார். மேலும் மருமகனும், மாமியாரும் திருமணம் செய்துள்ளனர். இதற்கு மகளை அழைத்துள்ளனர்.

இதுகுறித்து மகள் லாரன், எனது தாயை என்னால் ஒருபோதும் மன்னிக்க முடியாது. ஒரு தாய் தனது மகளுக்கு இது போன்ற ஒரு மோசத்தை செய்ய முடியாது என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.