3 வயது குழந்தையை கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை - 16 வயது சிறுவன் வெறிச்செயல்!
3 வயது சிறுமியை, 16 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
மயிலாடுதுறை, சீர்காழி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள அங்கன்வாடியில் படித்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம்போல் அங்கன்வாடிக்கு சென்று திரும்பியுள்ளார்.
அப்போது அங்கு வந்த 16 வயது சிறுவன் ஒருவன், குழந்தைக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின் குழந்தையை அருகில் உள்ள புதர் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். இதனால் குழந்தை அழுதுள்ளது.
3 வயது சிறுமி படுகாயம்
எனவே, ஆத்திரமடைந்த சிறுவன், குழந்தையின் தலை மற்றும் முகத்தில் கல்லால் அடித்துத் துன்புறுத்தியுள்ளார். இதில் குழந்தையின் கண் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பின் அங்கிருந்து சிருவன் தப்பிச் சென்றுள்ளார்.
இதற்கிடையில், குழந்தை வெகுநேரமாக வீடு திரும்பாததால், தீவிரமாக தேடியுள்ளனர். அந்த சமயத்தில் புதர் பகுதியில் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. உடனே, சென்று பார்த்ததில், சிறுமியின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளது.
தொடர்ந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்துள்ளனர்.