ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் மர்ம மரணம் - அதிர்ச்சி பின்னணி!
ஒரே குடும்பத்தில் உள்ள 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 பேர் மரணம்
ஹைதி, போர்ட்-ஓ-பிரின்ஸுக்கு தெற்கே சுமார் 30 மைல் தொலைவில் உள்ளது செகுயின் பகுதி. இங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 நபர்கள் உயிரிழந்து சடலமாக அவர்கள் வீட்டில் மீட்கப்பட்டுள்ளன.
இந்த மரணத்திற்கு காரணம் தெரியாமல் இருந்த நிலையில் அப்பகுதி மக்கள், விஷம் வைத்து கொல்லப்பட்டதன் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
தீவிர விசாரணை
மேலும் இதுகுறித்து அதிகாரி ஒருவர், உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு முடிந்த ஒரு நாளுக்கு பின்னரே இறப்பு குறித்த தகவல் கொடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தென்கிழக்கு துறை உயரதிகாரி, காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் அப்பகுதிக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
குற்ற சம்பவங்கள் அதிகம் நிகழும் நாடுகளின் பட்டியலில் ஹைதி முன்னிலையில் உள்ளது. குற்றம் செய்யும் குழுக்கல் சக்தி வாய்ந்ததாக வளர்ந்துள்ளன. இருப்பினும் இந்த மரணங்கள் அந்தக் கும்பலுடன் தொடர்புபடுத்தப்படவில்லை.
இதற்கிடையில், ஐக்கியநாடுகள் சபையின் அறிக்கை படி, கடந்த ஆண்டு மட்டுமே குற்றவியல் கும்பலால் 5000 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.