இன்ஸ்டாகிராம் பழக்கம்..அடிக்கடி உல்லாசம்- 15 வயது சிறுவனால் கர்ப்பமான சிறுமி!
இன்ஸ்டாகிராம் மூலம் 15 வயது சிறுவனுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி உல்லாசம்
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் அந்த 15 வயது சிறுமி. இவருக்கு 'இன்ஸ்டாகிராம்' மூலம் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியது. சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத போது அடிக்கடி வந்து சிறுமியுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
இந்த விஷயம் கடந்த 8 மாதங்களாக நடந்து வந்துள்ளது. இதனால் அந்த சிறுமி 5 மாத கர்ப்பம் அடைந்துள்ளார். இதனிடையே புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சிலர், சிறுமியின் வீட்டில் இந்த கர்ப்ப செய்தியை கூறியுள்னனர்.
கர்ப்பமான சிறுமி
இதனை சற்றும் எதிர்பாராத தாய் இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில் கர்ப்பம் உறுதியனது. இது தொடர்பாக அந்த சிறுமியின் தாயார் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அதன்படி, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான சிறுவனை கைது செய்தனர்.