திருமணமாகாமல் கர்ப்பமான சிறுமி - சிசுவை குப்பையில் வீசிய டாக்டர்!
திருமணமாகாமல் சிறுமி பெற்ற குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி கர்ப்பம்
சேலம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த மாணவி. இவர் படிப்பு முடிந்த நிலையில் வீட்டில் இருந்து வந்தார். அதே பகுதியில் உள்ள உறவினரை காதலித்து வந்துள்ளார். திருமணம் ஆகாத நிலையில், கர்ப்பம் அடைந்துள்ளார்.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவி, பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்ததுள்ளது. அதற்கு பின் அவருடைய உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக வேறொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழப்பு
இந்நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயிரிழந்துவிட்டார். அதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீஸார், குப்பை தொட்டியில் கிடந்த பெண் சிசு, மூச்சு திணறியபடி உயிருடன் இருந்ததை பார்த்து அதிர்ச்சிஅயடைந்துள்ளனர். உடனே சிசுவை மீட்டு சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
தொடர்ந்து, முதன்மை மருத்துவ அலுவலர் ஜெயசெல்வி உள்ளிட்ட குழுவினர், தனியார் மருத்துவமனை மருத்துவர் செல்வாம்பாளிடம் விசாரித்தனர். அதில், மருத்துவ குறிப்பு பட்டியலை முறையாக பின்பற்றவில்லை என தெரியவந்தது. தற்போது, போலீஸார் காதலனை தீவிரமாக தேடி வருகின்றனர்.