இளம்பெண் குளிப்பதை மறைந்து வீடியோ எடுத்த 15 வயது சிறுவன் - அலறிய பெண்!
சிறுவர் ஒருவர் இளம்பெண் குணலிப்பதை வீடியோ நெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ எடுத்த சிறுவன்
சென்னை, வியாசர்பாடியில் உள்ள எம்.கே.பி. நகரைச் சேர்ந்தவர் 28 வயது இளம்பெண், இவர் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது பக்கத்துக்கு வீட்டில் 15 வயது சிறுவன் ஒருவர் இருக்கிறார். நேற்று காலை இந்த இளம்பெண் பாத்ரூமில் குளிக்கும்பொழுது அந்த சிறுவன் மறந்து இருந்து வீடியோ எடுத்துள்ளார்.
இதனை கண்டு அந்த இளம்பெண் அலறியடித்தார் அப்பொழுது அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடினார். தொடர்ந்து, எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணை
இந்நிலையில், புகாரை தொடர்ந்து போலீசார் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் அந்த சிறுவனிடம் செல்போனை பறித்து பார்த்துள்ளனர், அப்பொழுது அந்த வீடியோவை டெலிட் செய்துள்ளார். மேலும், அந்த வீடியோக்கள் குறிப்பிட்ட ஸ்டோரேஜ் பகுதியில் பதிவானதை போலீசார் எடுத்து பார்த்துள்ளனர்.
அப்பொழுது அந்த பெண் குளிக்கும் வீடியோ இருந்துள்ளது, இதனையடுத்து, போலீசார் அந்த சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.