சிறுமிக்கு பலமுறை பாலியல் வன்கொடுமை - முதியவருக்கு 81 ஆண்டுகள் சிறை
15 வயது சிறுமியை பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததில் சிறுமி 6 மாத கர்ப்பமாக உள்ளதை அடுத்து 68 வயது முதியவருக்கு 81 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.
பாலியல் வன்கொடுமை
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 வயது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது. அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது,
சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவர்கள் சொன்ன தகவலை கேட்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுமி 6 மாத கர்ப்பமாக இருந்ததையடுத்து உடனே மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
சிறுமி கர்ப்பம்
போலீசில் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், தான் வசிக்கும் அதே பகுதியை சேர்ந்த 66 வயது முதியவர் தன்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததை சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட அந்த முதியவரை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை பலமுறை பாலியல் செய்ததை ஒத்துக் கொண்டிருக்கிறார். தையடுத்து கைது செய்யப்பட்ட அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
முதியவர் குற்றவாளி
போலீசார். இந்தப் பாலியல் வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணைகள் முடிந்து தற்போது தீர்ப்பு வைக்கப்பட்டிருக்கிறது. 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் முதியவர் குற்றவாளி என்று உறுதியானது.
இதனால் முதியவருக்கு 81 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம். மேலும் இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்திருக்கிறார் நீதிபதி.
66 வயது முதியவருக்கு 81 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
14 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமண ஏற்பாடு.. பாட்டிக்கு வலைவிரித்த போலீசார்!