டியூஷன் வந்த 10ஆம் வகுப்பு சிறுவனுக்கு பாலியல் தொல்லை - பகீர் சம்பவம்
டியூஷன் படிக்கும் 10ஆம் வகுப்பு மானவனுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
பாலியல் தொல்லை
குஜாராத், சந்த்கேதா பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்த் பாடேல்(45). ஆசிரியரான இவர் தனது வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரிடம் படிக்கும் 15 வயதுடைய 10ஆம் வகுப்பு மாணவனிடம் தொடப் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், மாணவன் டியூஷனுக்கு வரும் போதெல்லாம், அவனிடம் ஆபாச சைகைகளை காட்டியும், தவறான சீண்டகளை செய்தும் கோவிந்த் பாடேல் நடந்து கொண்டதாக மாணவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவரின் செல்போனுக்கு போன் செய்து ஆபாச வார்த்தைகளில் பேசியதாகவும் கூறப்படுகிறது. அதன் பேரில் ஆசிரியர் கோவிந்த் பாடேல் மீது போக்சோ, எஸ்சி எஸ்டி வன்கொடுமை சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.