15 வயது சிறுமியை கடத்தி, 2வது திருமணம் செய்த 60 வயது முதியவர்
15 வயது கிறிஸ்தவ சிறுமியை கடத்தி, 60 வயது நபர் 2-வது மனைவியாக கட்டாய திருமணம் செய்துள்ளார்.
கட்டாய திருமணம்
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் நைலா ஆம்ப்ரீன். இவர் பைசாலாபாத் நகரில் அரசு பள்ளியில் முதல்வராக இருந்துள்ளார். இவருக்கு வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆரிப் கில். மாற்று திறனாளியான அவரால் தனது குடும்பத்தினரின் தேவைகளை கவனிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
அதனால் அவரது மகளான சிதாரா ஆரிப் என்ற சிறுமியை நைலா வேலைக்கு கேட்டு உள்ளார். பணதேவையின் காரணமாக வேலைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார். இந்நிலையில் நைலாவின் 60 வயதான கணவர் சிறுமியின் மேல் ஆசைப்பட்டுள்ளார். இதனால் அவரை 2வதாக திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
முதியவர் கொடுமை
இதற்கிடையில், சிதாரா ஆரிப் வீட்டுக்கு திரும்பவில்லை. மேலும், சிறுமி மதம் மாறி ராணா தய்யப்பை திருமணம் செய்ததாக அதிர்ச்சி தகவல் அவரது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் போலீஸில் புகாரளித்துள்ளனர். ஆனால், போலீசார் அதனை கண்டுகொள்ளவில்லை.
அதற்கு பதிலாக அவர்களுக்கு மிரட்டல் வந்து உள்ளது. அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சிறுபான்மை கூட்டமைப்பின் தலைவரான பிரபல வழக்கறிஞரான அக்மல் பாட்டியை சிறுமியின் குடும்பத்தினர் தொடர்பு கொண்டுள்ளனர்.
அதன்பின் விசாரணையில், நைலா ஆம்பரீன் வீட்டில் நைலாவின் கணவரோ, சிதாராவோ இல்லை.
மேலும், இஸ்லாமிய திருமண சான்றிதழை போலீசாரிடம் ராணாவின் மனைவியான நைலா காட்டியுள்ளார்.
சிதாராவுக்கு 18 வயது இருக்கும் என நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.