தந்தை, சகோதரனை கொலை செய்த 15 வயது சிறுமி - பகீர் பின்னணி!
தந்தை, சகோதரனை கொலை செய்த 15 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலுக்கு தடை
மத்திய பிரதேசம், ஜபல்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதி, மில்லினியம் சொசைட்டியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் முகுல் சிங் (19) என்ற இளைஞருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
உடனே இதுகுறித்து சிறுமியின் தந்தை போலீஸில் புகாரளித்துள்ளார். அதன்பேரில், முகுல் சிங், போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், முகுல் சிங் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
சிறுமி வெறிச்செயல்
தொடர்ந்து, இருவரின் உறவையும் சிறுமியின் தந்தை ஏற்காமல் இருந்துள்ளார். இதனால், சிறுமியின் தந்தையை கொலை செய்ய இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.
இதனையடுத்து, இருவரும் சிறுமியின் தந்தை மற்றும் 9 வயது சகோதரனை கொலை செய்து, அவர்களின் உடல் பாகங்களை வெட்டி ஃப்ரீசருக்குள் வைத்துள்ளனர்.
தொடர்ந்து, முகுல் சிங்கும் சிறுமியும் தலைமறைவாகியுள்ளனர். தீவிரமாக தேடிவந்த போலீஸார் ஹரித்துவாரில் சிறுமியை கைது செய்துள்ளனர். முகுல் சிங்கை தேடி வருகின்றனர்.