அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்..! 15 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

Kerala
By Thahir May 14, 2023 06:31 AM GMT
Report

கொச்சி அருகே கடற்பகுதியில் சுமார் 15 ஆயிரம் கோடி மதிப்பிலான 2,500 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2500 கிலோ போதை பொருள் பறிமுதல் 

கேரள மாநிலம் கொச்சி அருகே கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் படி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இந்திய கடற்படையுடன் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்..! 15 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் | 15 Thousand Crore Worth Of Drugs Seized

அப்போது அந்த வழியாக வந்த கப்பலை மறித்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சுமார் 2500 கிலோ அளவிலான மெத்தம்பேட்டமைன் எனும் போதைப்பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனே அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒருவர் கைது 

இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.15,000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் என்று தெரிவித்தனர்.

மேலும் இதுதொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈராக்கில் இருந்து அஸ்திரேலியாவுக்கு இந்த போதைப்பொருள் கடத்தப்பட்டபோது பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.