மூட்டைக்குள் அள்ள அள்ள பணம் - அரிசி என்று வாங்கிச் சென்றவரை தேடிய வியாபாரி!

Cuddalore Crime Money
By Sumathi Oct 24, 2024 12:30 PM GMT
Report

 15 லட்சத்தை அரிசி மூட்டையில் பதுக்கி வைத்த அரிசி வியாபாரிக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

 அரிசி மூட்டையில் பணம்

கடலூர், வடலூர்-நெய்வேலி சாலையில் அரிசி மண்டி நடத்தி வருபவர் சண்முகம். இவர் திருட்டுக்கு பயந்து15 லட்சம் ரூபாய் பணத்தை கடையில் இருந்த ஒரு அரிசி மூட்டையில் பதுக்கி வைத்திருந்துள்ளார்.

மூட்டைக்குள் அள்ள அள்ள பணம் - அரிசி என்று வாங்கிச் சென்றவரை தேடிய வியாபாரி! | 15 Lakhs Stashed Bag Rice Person Bought Cuddalore

இந்நிலையில் தன்னுடைய உறவினரான சீனிவாசன் என்பவரிடம் அரிசிக் கடையை சிறிது நேரம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு பணி நிமித்தமாக வெளியே சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கையில் 15 லட்சம் ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்த அரிசி மூட்டை காணாமல் போயிருந்தது.

ரூ.500 லஞ்சம் கொடுக்கவில்லை - இளைஞரின் பாஸ்போர்ட்டை கிளித்தெறிந்த தபால்காரர்!

ரூ.500 லஞ்சம் கொடுக்கவில்லை - இளைஞரின் பாஸ்போர்ட்டை கிளித்தெறிந்த தபால்காரர்!

பதறிய வியாபாரி

இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகன், உறவினரிடம் இதுகுறித்து கேள்வியெழுப்பியுள்ளார். அதனை ஒருவருக்கு விற்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். உடனே, கடையிலிருந்த சிசிடிவி காட்சியை எடுத்து பார்த்த பொழுது மந்தாரக்குப்பம், மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் என்ற முதியவர் அந்த அரிசி மூட்டையை வாங்கி சென்றது தெரியவந்துள்ளது.

cuddalore

அங்கு சென்றபோது அரிசி மூட்டை பிரிக்கப்பட்டுள்ளது. பூபாலன் வீட்டில் இல்லாத நிலையில் உடனடியாக பூபாலனின் மகளிடம் சண்முகம் நடந்ததை எல்லாம் விளக்கமாக கூறியுள்ளார். மூட்டைக்குள் கையை விட்டு தேடிய பொழுது உள்ளே 10 லட்சம் மட்டுமே இருந்துள்ளது.

இதனையடுத்து 15 லட்சத்தில் ஐந்து லட்சம் ரூபாயை என் உறவினரே எடுத்துவிட்டு அரிசி மூட்டையை ஒருவரிடம் விற்றுள்ளார் என போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.