பாராசிட்டமால் 650 வகை மாத்திரைக்கு தடை - அரசு அறிவிப்பு
15 மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தரம் குறைவு
கர்நாடகாவில் மருந்துக்கட்டுப்பாட்டுத் துறை கடந்த மே மாதத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் மருந்துகளின் மாதிரிகளைப் பெற்று ஆய்வுகளை மேற்கொண்டது.
அதில் சில மாத்திரை, மருந்துகளின் தரம் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மாத்திரை, மருந்துகள் என்று 15 தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மைசூருவில் உள்ள அபான் பார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்த பாராசிட்டமால் மாத்திரையான போமோல்-650 (Pomol - 650), மைசூருவை தளமாகக் கொண்ட என் ரங்கா ராவ் & சன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்த ஓ சாந்தி கோல்ட் கிளாஸ் கும்கம் உள்ளிட்டவை அடங்கும்.
15 தயாரிப்புகளுக்கு தடை
மேலும் அல்ட்ரா லேபரேட்டரீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் டாம் பிரான் பார்மாசூட்டிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்த காம்பவுண்ட் சோடியம் லாக்டேட் இன்ஜெக்சன் ஐபி, பயோன் தெரபியூட்டிக்ஸின் மிட்டு க்யூ7 சிரப் (Mitu Q7 Syrup), ஸ்வெஃப்ன் பார்மாசூட்டிகல்ஸின் பான்டோகாட்-டிஎஸ்ஆர் காப்ஸ்யூல்கள், புனிஸ்கா இன்ஜெக்டபிள்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் சோடியம் குளோரைடு இன்ஜெக்சன் ஐபி 0.9% w/v உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளது.
சேஃப் பேரன்டெரல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கோழி தடுப்பூசிகளுக்கான ஸ்டெரைல் டைலூயன்ட்கள் போன்ற கால்நடை பொருட்கள் மற்றும் கிளிமிஸ்-2 (கிளிமிபிரைடு மாத்திரைகள்), அயர்ன் சுக்ரோஸ் இன்ஜெக்சன் (இரோகெய்ன்) மற்றும் பைராசிட்-ஓ சஸ்பென்ஷன் போன்றவையும் தடை செய்யப்பட்டுள்ளது.
Drugs Testing Laboratory, Karnataka, has opined that the following drugs/cosmetics as "Not of Standard Quality".
— Dinesh Gundu Rao/ದಿನೇಶ್ ಗುಂಡೂರಾವ್ (@dineshgrao) June 25, 2025
I urge all chemists, doctors, hospitals & nursing homes to IMMEDIATELY stop stocking/selling/using these products. If you have any stock, inform your local Drugs… pic.twitter.com/WDdwpv1QGf
இந்த பொருட்களை அங்கு மருந்தகங்களில் விற்பனை செய்யக் கூடாது. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்க கூடாது எனவும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.