தோனி தொடுத்த வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரி தண்டனை தடை நீடிப்பு - நீதிமன்றம் உத்தரவு!

MS Dhoni TATA IPL Madras High Court
By Swetha May 05, 2024 08:01 AM GMT
Report

கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த சிறை தண்டனைக்கு இடைக்கால தடை நீடித்தது நீதிமன்றம் .

தோனி வழக்கு 

கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர் போட்டியில் சூதாட்டம் குறித்து அதிகாரி சம்பத்குமார் விசாரணை நடத்தினார். அதன்படி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

தோனி தொடுத்த வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரி தண்டனை தடை நீடிப்பு - நீதிமன்றம் உத்தரவு! | 15 Day Jail To Ips In Contempt Case Filed By Dhoni

அதன்பேரில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரி தோனி சென்னை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக சம்பத்குமார் பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.

பண மோசடி வழக்கு - எம்.எஸ். தோனி மீது நீதிமன்றத்தில் பரபரப்பு புகார்..?

பண மோசடி வழக்கு - எம்.எஸ். தோனி மீது நீதிமன்றத்தில் பரபரப்பு புகார்..?

நீதிமன்றம் உத்தரவு

அதில் உள்ள தகவல்கள் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாகக் கூறி, அவருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

தோனி தொடுத்த வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரி தண்டனை தடை நீடிப்பு - நீதிமன்றம் உத்தரவு! | 15 Day Jail To Ips In Contempt Case Filed By Dhoni

 மேல்முறையீடு செய்வதற்காக தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டனர். பிறகு சம்பத்குமார் மேல்முறையீடு செய்தார். இதனையடுத்து, விசாரணைக்கு வந்த வழக்கில், சம்பத்குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், மேல்முறையீடு மனுக்கு பதில் அளிக்க தோனிக்கு உத்தரவிட்டது. இதற்கிடையில், மீண்டும் நடைபெற்ற விசாரணையில், விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு மனுவை விசாரித்து தீர்ப்பு கூறும் வரை,தோனியின் அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனைக்கான இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டது.