15 மாநகராட்சிகள் திமுக ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவை - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள் திமுக ஆட்சி காலத்தில் உருவானவை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதிய மாநகராட்சிகள்
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள் இருந்த நிலையில், நேற்று புதிதாக 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.
நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்படுவதன் மூலம் அப்ந்த பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க முடியும்.
மு.க.ஸ்டாலின்
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த பதிவில், நேற்று நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நகரங்களை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தியுள்ளோம்.
நேற்று நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நகரங்களை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தியுள்ளோம்.
— M.K.Stalin (@mkstalin) August 13, 2024
தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளில் 15 மாநகராட்சிகள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் உருவானவை என்பதைப் பெருமையோடு சொல்வோம்! pic.twitter.com/udCpxnK4ea
தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளில் 15 மாநகராட்சிகள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் உருவானவை என்பதைப் பெருமையோடு சொல்வோம்! என தெரிவித்துள்ளார்.