145 மருந்துகள் தரமற்றவை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல் - மத்திய அரசு எச்சரிக்கை!

India Medicines
By Vidhya Senthil Mar 04, 2025 11:30 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

   சர்க்கரை நோய், கிருமி உட்கொள்ளும் 145 மருந்துகள் தரமற்றவை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 145 மருந்துகள்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை மற்றும் மருந்துகளையும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொண்டது.கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் 1,000-க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

145 மருந்துகள் தரமற்றவை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல் - மத்திய அரசு எச்சரிக்கை! | 145 Medicines For Diabetes Of Substandard Quality

ஆய்வின்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.அதில் , சளித் தொற்று, கிருமித் தொற்று, சர்க்கரை நோய், ஜீரண மண்டல பாதிப்பு, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 145 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கங்கை நதிநீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை -அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

கங்கை நதிநீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை -அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்!

 தரமற்றவை 

அந்த மருந்துகளில் பெரும்பாலும் இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. மேலும் இந்த ஆய்வு குறித்த விவரங்கள், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

145 மருந்துகள் தரமற்றவை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல் - மத்திய அரசு எச்சரிக்கை! | 145 Medicines For Diabetes Of Substandard Quality

இந்த விவரங்களைப் பொதுமக்கள் அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து போலி, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.