தென்காசியில் செப்.2 வரை 144 தடை - ஆட்சியர் உத்தரவு ஏன்?

COVID-19 Tamil nadu
By Sumathi Aug 19, 2022 05:05 AM GMT
Report

தென்காசியில் இன்று முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 144 தடை

தென்காசியில், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இன்று தொடங்கி 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தது அமலுக்கு வந்தது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தென்காசியில் செப்.2 வரை 144 தடை - ஆட்சியர் உத்தரவு ஏன்? | 144 Prohibitory Order In Tenkasi District

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா பச்சேரி கிராமத்தில் 20ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ள ஒண்டிவீரன் 251-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி நெற்கட்டும்செவல் கிராமத்தில் நடைபெறும்

 பூலித்தேவன் பிறந்தநாள்

மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

தென்காசியில் செப்.2 வரை 144 தடை - ஆட்சியர் உத்தரவு ஏன்? | 144 Prohibitory Order In Tenkasi District

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக தென்காசி மாவட்டம் முழுவதும் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 2ஆம் தேதி மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.

கொரோனா தொற்று

எனவே பொதுமக்கள் அனைவரும் கூட்டமாக செல்லாமல் சமூக இடைவெளியுடன் நான்கு நபர்கள் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.