சிவகங்கை: நாளை முதல் அக்.31ம் தேதி வரை 144 தடை!
Tamil nadu
Festival
By Sumathi
சிவகங்கையில் நாளை முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குருபூஜை - 144 தடை
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முக்கியமானவர்கள். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 அக்டோபர் 24 இல் திருப்பத்தூரில் இவ்விருவரும் தூக்கிலிடப்பட்டனர்.
இந்நிலையில் சிவகங்கை, திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காளையார்கோயிலில் நடைபெறும்
குருபூஜை தினத்தையொட்டி நாளை முதல் அக்.31 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் அறிவித்துள்ளார்.