சிவகங்கையில் அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு - என்ன காரணம்?
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதனது.
நினைவு தினம்
சிவகங்கை மாவட்டத்தில், ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் முக்கியமான மருது சகோதரர்களின் நினைவு தினம் அக்.24-ம் தேதி திருப்பத்தூரிலும், அக்.27-ம் தேதி காளையார் கோவிலிலும் நடைபெறுகிறது.
அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் பசும் பொன்னில் அக்.30-ம் தேதி முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் விழா நடைபெறுகிறது.
வீட்டிற்குள் நைசாக வந்த கொள்ளையர்கள்.. அரிவாளை சுழற்றிக் கொண்டு ஓட ஓட விரட்டியடித்த 82 வயது முதியவர் - குவியும் பாராட்டு!
தடை உத்தரவு
இந்நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அக்.23-ம் தேதி முதல் அக்.31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு போட்டுள்ளார். மேலும் மருது சகோதரர்கள் நினைவு தின நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பார்வையிடவுள்ளனர்.
அதேபோல் காளையார் கோவில், திருப்பத்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தென் மண்டல ஐஜி நரேந்திரன் நாயர், ராமநாதபுரம் சரக டிஐஜி துரை, எஸ்பி அரவிந்த் ஆகியோர் பார்வையிடவுள்ளனர். மேலும், இதற்காக சுமார் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.