மீண்டும் விவசாயிகள் போராட்டம்...144 தடை - உச்சகட்ட பதற்ற நிலையில் டெல்லி!
டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வேளான் சட்டங்கள்
மத்திய அரசு அறிமுகப்படுத்திய வேளான் சட்டங்கள் தொடர்பாக தலைநகர் செல்லியின் எல்லையில் ஓராண்டாக மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மேற்கொண்ட நீண்ட போராட்டம், அவர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்ட பிறகு முடிவுக்கு வந்தது.

ஆனால், தற்போது, விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) மற்றும் பல பிரச்சனைகளுக்காக புதிய போராட்டத்திற்கு தயாராகிவிட்டதாக தெரிகிறது. விவசாயிகளின் போராட்டத்தைக் கருத்தில் கொண்டு தலைநகர் டெல்லியின் திக்ரி எல்லையில் சிமென்ட் தடுப்புகளை அமைக்கும் பணியை டெல்லி காவல்துறை மீண்டும் தொடங்கியுள்ளது.
ராகேஷ் திகாத்
மறுபுறம், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காக மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும், அதற்கான நேரம் விரைவில் முடிவு செய்யப்படும் என்று விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் கூறினார்.

விவசாயிகளின் கோரிக்கை அரசு ஏற்றுக் கொண்டபோது, மத்திய அரசு உறுதிமொழிகளை எழுத்துப்பூர்வமாக அளித்தது. அதன்படி, குறைந்தபட்ச நிர்ணய விலை தொடர்பாக ஒரு குழுவை அமைப்பதாகவும், விவசாயிகள் மீதான வழக்குகளை உடனடியாக வாபஸ் பெறுவதாகவும் மத்திய அரசு உறுதியளித்திருந்தது.
மீண்டும் போராட்டம்
அறிவித்தபடி அரசு, குழு ஒன்றை அமைத்தபோது, ஐக்கிய கிசான் மோர்ச்சா அதை முற்றிலுமாக நிராகரித்ததுடன், குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதற்கு எதிரானவர்கள் அதில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டியது.
தற்போது குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று, டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.