வரலாற்று நிகழ்வு - அமளி காரணமாக இதுவரை 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..!!
நாடாளுமன்ற நிகழ்வில் முதல் முறையாக இதுவரை 141 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
மக்களவை சம்பவம்
சென்ற வாரம், எம்.பி.க்கள் அரங்கிற்குள் இருவர் அத்துமீறி நுழைந்து புகை குண்டுகளை வீசிய சம்பவம் தற்போது வரை நாடாளுமன்றத்தின் அவைகளில் எதிரொலித்து வருகின்றது.
இந்த விவகாரத்தில் இது வரை கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
நேற்று, ஒரே நாளில் 78 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசாங்கம் அரசாங்கம் நாட்டின் ஜனநாயகத்தை தாக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
வரலாற்று சம்பவம்
வரும் 23-ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் குளிர்கால கூட்டத் தொடரில் பெரும்பாலான உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இடைநீக்கம் செய்யப்பட்ட பெரும்பாலான எம்.பி.க்கள், இந்திய கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
543 உறுப்பினர்களைக் கொண்ட லோக்சபாவில் இதுவரை 142 எம்.பி.க்களை கொண்ட இந்திய கூட்டணியில் இதுவரை 95 பேரும், 250 உறுப்பினர்களைக் கொண்ட ராஜ்யசபாவில் 101 எம்.பி.க்கள் கொண்ட இந்திய கூட்டணியின் 46 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற வரலாற்றில், ஒரு கூட்டத் தொடரில் இத்தனை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது வரலாற்றுச் சம்பவமாக கருதப்படுகிறது.