4 நாட்கள் சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து சீரழித்த சிறுவர்கள் - அதிர்ச்சி பின்னணி!
சிறுமி வீட்டில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமிக்கு நேர்ந்த சம்பவம்
ஆந்திரா, கிருஷ்ணா மாவட்டம் ஜி.கொண்டூரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர், பக்கத்து வீட்டுக்காரருடன் வீரபனேனி குடேமில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு உறவினருக்கும், சிறுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் சிறுமி வீட்டை விட்டு வெளியேறி தனியாக நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். இதனை கவனித்த 15 வயது சிறுவன் மற்றும் ரசாக் என்ற இளைஞரும் சிறுமியிடம் பேசியுள்ளனர்.
7 பேர் கைது
தொடர்ந்து, பைக்கில் அழைத்துக்கொண்டு வீட்டில் விட்டுவிடுவதாக தெரிவித்துள்ளனட். இதனை நம்பிய சிறுமி அவர்களுடன் சென்றுள்ளார். இருவரும் ஒரு வீட்டில் சிறுமியை அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும், நண்பர்களான அணில் குமார், ஜிதேந்திரா, அனித், ஹர்ஷவர்தன் என்ற 4 சிறுவர்களும் சிறுமியை, 4 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின், மச்சாவரம் சாலையில் விட்டு தப்பி சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் சிறுமியை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
உடனே போலீஸார் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த பாதிப்பால் சிறுமியால் பேசமுடியவில்லை. தற்போது இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் 2 சிறுவர்கள் உள்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.