6 மாத குழந்தையை தீயில் தொங்கவிட்ட பெற்றோர் - மிரளவைக்கும் பின்னணி!
பெற்றோர், குழந்தையை தலை கீழாக கட்டி தீ குண்டத்திற்கு நேராக தொங்க விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
மூட நம்பிக்கை
மத்திய பிரதேசம், கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த குழந்தை அழுதுக்கொண்டே இருந்துள்ளது.
தொடர்ந்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், அதே கிராமத்தில் உள்ள ராகவீர் எனும் மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் குழந்தையின் உடலில் ஆவி புகுந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
குழந்தைக்கு ஏற்பட்ட அபாயம்
மேலும், அந்த இடத்தில் செங்கல்களை அடுக்கி தீயை மூட்டி பின்னர் குழந்தையை தலை கீழாக கட்டி அந்த தீ குண்டத்திற்கு நேராக தொங்க விட்சுள்ளார். இதனால் குழந்தை வெப்பம் தாங்காமல் அலறியுள்ளது.
இதன்மூலம், அந்த குழந்தைக்கு கண் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே, பெற்றோர் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.