14 வயது சிறுமிக்கு திருமணம்; வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்ற கொடுமை - வைரல் வீடியோ
14 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் செய்ய தூக்கிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை திருமணம்
கிருஷ்ணகிரி, ஓசூர் அருகேயுள்ள மலைக் கிராமத்தை சேர்ந்தவர் மாதேஷ் (30). இவருக்கு 14 வயது சிறுமியுடன் கர்நாடகாவில் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது.
தொடர்ந்து மலைக் கிராமத்துக்கு மாதேசும், சிறுமியும் வந்துள்ளனர். இதற்கிடையில், திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி வந்த சிறுமி, வீட்டிலிருந்து தப்பி, அப்பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
மூவர் கைது
இதனையறிந்த உறவினர்கள் அங்குச்சென்று சிறுமியை வலுக்கட்டாயமாக தோளில் தூக்கிச்சென்று கணவர் வீட்டில் விட்டுள்ளனர். அப்போது சிறுமி கதறி அழுதுள்ளார்.
இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் 14 வயது குழந்தைக்கு திருமணம் செய்து வைத்த சிறுமியின் தாய் மற்றும் அவரது சகோதரன், குழந்தைக்கு தாலி கட்டிய நபர் என மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.