8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை - சீரழித்த 14வயது சிறுவன்
8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
சத்தீஸ்கர், ராய்ப்பூரில் உள்ள விதான்சபா காவல் நிலையத்தில் 8 வயது சிறுமியைக் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, விசாரணை செய்து போலீசார் சிறுமியை பல இடங்களில் தேடினர். தொடர்ந்து, 5 நாட்களுக்குப் பிறகு சிறுமி அவர் வசித்து வந்த சத்து ஏரியாவில் உள்ள காலி இடத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
அதனையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
சிறுமி கொலை
இந்தச் சம்பவத்தில் மாநில அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து பாஜக ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அதில், பாஜக மூத்த தலைவர் சஞ்சய் ஸ்ரீவத்சவா, ஒட்டுமொத்த மாநிலமும் குற்றங்களின் இருப்பிடமாக மாறியுள்ளது.
சத்தீஸ்கரில் நடக்காத குற்றங்களே இல்லை என்றும், சட்ட விரோத செயல்களின் மூலம் கிடைக்கும் வருவாய் போலீசார் மூலம் அரசுக்கு செல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.