ஆசனவாயில் மாணவனுக்கு கடும் நோய்த்தொற்று - தமிழ் ஆசிரியர் செய்த கொடூரம்!
தமிழ் ஆசிரியர், மாணவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை
சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் பள்ளியில், மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் படித்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.
தொடர்ந்து பெற்றோர் அவரை மருத்துவமனையில் அனுமதித்ததில் அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.
இதற்கிடையில் இதுதொடர்பாக பெற்றோர் மாணவனிடம் விசாரித்ததில், பள்ளியில் தமிழ் ஆசிரியர் சுதாகர், மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தததால், இந்த நோய்த்தொற்று ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்தது. உடனே பெற்றோர் ஆசிரியர் குறித்து பள்ளியில் புகாரளித்துள்ளனர்.
ஆசிரியர் கைது
ஆனால் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் போலீஸில் புகாரளித்துள்ளனர். தொடர்ந்து மாணவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை ஆவணங்கள் மற்றும் மாணவன் அளித்த வாக்குமூலத்தின்படி, ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள பெற்றோர், உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், தங்கள் மகனுக்கு சிகிச்சை நடக்கிறது. நடந்த சம்பவங்களால் கடுமையான மனஅழுத்தத்திற்கு தங்கள் மகன் ஆளாகியிருக்கிறான்.
பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு பிறப்புறுப்பு ஆசனவாய் உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு ஏற்படும் வகையில் செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் தயங்கியதாக வேதனை தெரிவித்துள்ளனர்.