ஆணுறுப்பில் தம்பில்ஸை தொங்க விட்டு ராக்கிங் - கல்லூரி மாணவர்களுக்கு நடந்த கொடூரம்
முதலாமாண்டு மாணவர்களை கொடூரமாகி ராக்கிங் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராக்கிங்
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் அரசு நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் விடுதியில் 3ஆம் ஆண்டு மாணவர்கள், முதலாமாண்டு மாணவர்கள் கடுமையாக ராக்கிங் செய்துள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆணுறுப்பில் தம்புல்ஸ்
இந்த புகாரில், "3ஆம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் கடந்த சில மாதங்களாகவே எங்களுக்கு ராகிங் கொடுமை செய்து வருகிறார்கள். எங்களை நிர்வாணப்படுத்தி உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் தம்புல்ஸை எங்களின் அந்தரங்க உறுப்பில் கட்டி கொடுமைப்படுத்தினார்கள். ஜாமென்ட்ரி பாக்ஸில் உள்ள காம்பஸை வைத்து எங்களின் உடல்களில் காயப்படுத்துவார்கள்.
காயம்பட்ட இடங்களில் அவர்கள் பயன்படுத்தும் லோஷன் க்ரீம்களை தடவி, நாங்கள் வலியில் அலறி துடிக்கும்போது, அந்த க்ரீமை வாய், முகம், தலையில் பூசி டார்ச்சர் செய்வார்கள். வார இறுதி நாட்களில் மது அருந்துவதற்கு எங்களை அடித்து பணம் பறிப்பார்கள். மது அருந்த சொல்லி கொடுமைப்படுத்துவார்கள். மேலும் இதை வீடியோ பதிவு செய்து, இது குறித்து வெளியே சொல்ல கூடாது என மிரட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட, 2ஆம் ஆண்டு மாணவர்கள் சாமுவேல் ஜான்சன் (20) மற்றும் ஜீவா என்எஸ் (19) மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்கள் ராகுல் ராஜ் கேபி (22), ரிஜில்ஜித் சி (21) மற்றும் விவேக் என்வி (21) ஆகிய 5 பேரை இடைநீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ராக்கிங் தடை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ள காவல்துறையினர், 5 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.