புடவை அணிந்த பெண்களை மட்டும்... தாக்கிய சைக்கோ நபர் - மதவெறியா?
புடவை அணிந்த பெண்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புடவை அணிந்த பெண்கள்
அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜான்சன்(37). இவர் கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் 50-73 வயது மதிக்கத்தக்க புடவை அணிந்த பெண்களை குறிவைத்து இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
சுமார் 14 பெண்களை தாக்கி 35,000 டாலர் மதிப்பிலான நெக்லெஸ் உள்ளிட்ட நகைகளை பறித்துள்ளார்.புடவை அணிந்து பொட்டு வைத்து, இந்து அடையாளம் கொண்ட பெண்களை குறிவைத்தே இத்தாக்குதலை இந்த நபர் மேற்கொண்டுள்ளதால்,
தாக்குதல்
அப்பகுதி நிர்வாகம் இந்த குற்றத்தை இந்துக்களுக்கு எதிரான குற்றமாக பதிவு செய்துள்ளது.ஒரு திருட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரையும் இந்த லாதன் ஜான்சான் தாக்கியுள்ளார். மேலும் இவரை சன்டா கார்லா பகுதி காவல்துறை கைது செய்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு மாவட்ட அட்டார்னி ஜெஃப் ரோசன் வருத்தம் தெரிவித்துள்ளார். இங்கு வாழும் அனைத்து தெற்காசிய மக்களுக்கும், இந்தியர்களுக்கும் உரிய பாதுகாப்பு தரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்து அமெரிக்க அமைப்பு கூறுகையில், தொடர்ச்சியாக ஆன்லைன் மூலம் இந்து வெறுப்பு பதிவுகள் பரப்பப்பட்டு குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க சட்ட ரீதியான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றுள்ளது.