நயன்தாரா போல் திருமண உடை அணிந்த நடிகை ஆர்த்தி - வைரலாகும் புகைப்படம் - கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்
நயன்தாரா போல் திருமண உடை அணிந்து நடிகை ஆர்த்தி வெளியிட்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா - விக்னேஷ் திருமணம்
7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9ம் தேதி, இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
பிரபலங்கள் பங்கேற்பு
இத்திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நெல்சன் அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர். மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
வைரலாகும் புகைப்படம்
திருமண குறித்த புகைப்படங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவனும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். அந்த திருமண புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
அந்த புகைப்படத்தில், சிவப்பு சேலையில் தேவதையாக நயன்தாரா நடந்து வரும் புகைப்படமும், ராஜ உடையில் விக்னேஷ் சிவன் நடந்து வரும் புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வைரலானது.
நயன்தாரா போல் திருமண உடை அணிந்த நடிகை ஆர்த்தி
தற்போது சமூகவலைத்தளங்களில் நடிகை ஆர்த்தியின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில் நடிகை ஆர்த்தி, நயன்தாரா திருமணத்தின் போது அணிந்த சிவப்பு நிற புடவை, நகைகளை தானும் அணிந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை நடிகை ஆர்த்தி, கணவர் கணேஷ் தனது டுவிட்டரில் பதிவிட்டு, எக்ஸ்பெக்டேஷன் - ரியாலிட்டி என்றும், என்ன கொடுமை இது சார்... என்று பதிவிட்டுள்ளனர்.
தற்போது வைரலாகும் இந்த புகைப்படத்திற்கு சிலர் நன்றாக இருப்பதாகவும், ரசிகர்கள் பலர் கிண்டலடித்தும் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
என்ன கொடுமை இது ??Expectation vs reality pic.twitter.com/MQxiaS4hib
— Actress Harathi (@harathi_hahaha) August 11, 2022