வாந்தி, வயிற்றுப் போக்கு - 137 மாணவர்கள் உடல்நிலை மோசம்

Karnataka
By Sumathi 1 மாதம் முன்
Report

ஹாஸ்டல் உணவைச் சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹாஸ்டல் உணவு

கர்நாடகா, மங்களூருவின் சக்திநகர் பகுதியில் தனியார் நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மாணவர்கள் வழக்கம் போல தங்கள் ஹாஸ்டல் மெஸ்ஸில் உணவு சாப்பிட்டுள்ளனர்.

வாந்தி, வயிற்றுப் போக்கு - 137 மாணவர்கள் உடல்நிலை மோசம் | 137 Students Hospitalised Food At Hostel Karnataka

இதை உண்ட மாணவர்களுக்குப் புட் பாய்சன் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளனர்.

137பேர் பாதிப்பு

அவர்களில் சிலரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் மற்றும் கல்வி நிறுவனம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், ஒரே நேரத்தில் இத்தனை பேருக்கு புட் பாய்சன் ஆக என்ன காரணம் என்பதைக் கண்டறிய முயன்று வருவதாக மங்களூரு போலீஸ் கமிஷனர் என் சஷி குமார் தெரிவித்துள்ளார்.   

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.